விநாயகர் சதுர்த்தியில் வீட்டில் காய்கறி விநாயகர் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2021 12:09
திருக்கோவிலூர்: திருக்கோவிலூரில் காய்கறிகளால் விநாயகர் செய்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்ற தத்துவத்துடன் ஒரு வீட்டில் வழிபாடு செய்துள்ளனர்.
கடவுள் பக்தி உள்ளவர்களின் மனதில் ஒவ்வொரு நாளும் நீங்க இடம் பிடிக்கும் முழுமுதற் கடவுள் விநாயகர். இவரை பல்வேறு வடிவங்களிலும், பொருட்களிலும் வடிவமைத்து வழிபாடு நடத்துவர். என்றாலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் அவருக்கென்று வீட்டில் சிலை வைத்து மிகச்சிறப்பான வழிபாட்டை நடத்துவது நம்மரபு. அந்த வகையில் திருக்கோவிலூர் என்.ஜி.ஜி.ஓ., நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் மனைவி அனிதா, 43; தனது வீட்டில் இரண்டரை அடி உயரத்தில் காய்கறிகளால் ஆன விநாயகரை உருவாக்கி சிறப்பு வழிபாட்டை நடத்தினர். இதனை காண அக்கம்பக்கத்து வீட்டினரும் திரளாக வந்திருந்தனர். மனிதன் இயற்கையோடு ஒன்றி இறை நம்பிக்கையுடன் வாழ்வதன் மூலம் சுற்றுப்புறச்சூழல் பாதிக்காத வகையில் அடுத்த தலைமுறைக்கு இவ்வுலகை கொண்டு செல்ல முடியும் என்பதே இதன் நோக்கம் என்கிறார் இதனை வடிவமைத்த அனிதா.