பதிவு செய்த நாள்
11
செப்
2021
06:09
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் வரும், 16ல் நடக்க உள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், வரும் நவ., 10ல் தீப திருவிழா கொடியேற்துடன் தொடங்கி, நவ., 16ல் மஹாரத தேரோட்டம், 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது. விழா பூர்வாங்க பணிகள் தொடங்க, வரும், 16ல் அதிகாலை, 4:30 மேல், 6:00 மணிக்குள், சிம்ம லக்னத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடக்க உள்ளது. தொடர்ந்து, வாகனங்கள் பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், அழைப்பிதழ் அச்சடித்தல், தேர் பழுது பார்த்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தொடங்கப்படும்.
கொரோனா பரவலால் கடந்தாண்டு தீப திருவிழாவில், சுவாமி மாடவீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. மஹாதீபத்துக்கு, கோவிலினுள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.