உத்தமபாளையம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11செப் 2021 06:09
கம்பம்: கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் ஹிந்து அமைப்புகள் 121 விநாயகர் சிலைகள் வீடுகள் மற்றும் கோயில்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்தது ஆனால் வீடுகளிலும் கோயில்களிலும் வைத்து வழிபாடு நடத்துவதற்கு தடை ஏதுமில்லை என்றும் அறிவித்திருந்தது. அதன்படி கம்பம் உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளில ஹிந்து முன்னணி பா.ஜ.உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளால் வீடுகள் மற்றும் கோயில்களில் 121 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை விநாயகர் சிலைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.சுருளிப்பட்டி நாராயணன் தேவன்பட்டி காமயகவுண்டன்பட்டி ராயப்பன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. கம்பம், உத்தமபாளையம பகுதிகளில் நாகர்கள் இன்று கரைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.