ஆண்டிபட்டி-ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயிலுக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும்.தெப்பம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்பகுதியில் இருந்து வரும் சுனை, இயற்கையான சூழல் கோயிலின் தனிச்சிறப்பு. அமாவாசை, மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி நாட்களில் அதிக பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.ஆண்டிபட்டியில் இருந்து காலை 8:30, மாலை 4:00 மணிக்கும் அரசு பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில்கோயிலுக்கு செல்லும்பக்தர்கள் தெப்பம்பட்டியில் இருந்து தனியார்வாகனங்களில் அல்லது நடந்து செல்ல வேண்டும். பஸ் வசதி இல்லாததால் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.ஆண்டிபட்டியில் இருந்து வேலப்பர் கோயிலுக்கு பஸ் ட்ரிப்பை கூடுதலாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.