பதிவு செய்த நாள்
13
செப்
2021
06:09
காஞ்சிபுரம் : விநாயகர் சதுர்த்தியையொட்டி, சின்ன காஞ்சிபுரம் பகுதிகளில் வீடுகளில் வழிபாடு செய்யப்பட்ட களிமண் விநாயகர் சிலைகள், நேற்று திருக்காலிமேடு, சின்ன வேப்பங்குளத்தில், விசர்ஜனம் செய்யப்பட்டன. கொரோனா ஊரடங்கால் விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த அரசு தடை விதித்து இருந்தது.இருப்பினும், வீடுகளில் களிமண் விநாயகர் சிலை வைத்து வழக்கமான வழிபாடு நடத்தலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.இதில், சின்ன காஞ்சிபுரம், மின் நகர், மாமல்லன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட களிமண் விநாயகர் சிலைகள், மூன்றாம் நாளான நேற்று, திருக்காலிமேடு சின்ன வேப்பங்குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன. முன்னதாக குளக்கரையில், விநாயகர் சிலைக்கு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.