பதிவு செய்த நாள்
13
செப்
2021
06:09
பல்லடம்: விநாயகர் சதுர்த்திக்கு, அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக, பல்லடத்தில் விநாயகர் சிலைகள் தேக்கமடைந்துள்ளன. செப்., 10 அன்று விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலங்கள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. வீடுகளில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது. தமிழக அரசு விதித்த இக்கட்டுப்பாடுகள் காரணமாக, விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தன.
இது குறித்து பல்லடம் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிலை தயாரிப்பாளர் பாலாஜி கூறுகையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதனால், வழக்கமாக வரும் சிலை ஆர்டர்கள் குறைந்தன. நடப்பு ஆண்டு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து, முன்பே சிலை தயாரிக்கும் பணி துவங்கியது. ஆனால், அரசு விதித்த கட்டுப்பாடு காரணமாக, ஆறு அடி உயரத்துக்கும் அதிகமாக சிலைகள் வைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. வழக்கமாக, உயரமான சிலைகளே அதிகம் புக்கிங் செய்யப்படும். அரசுக் கட்டுப்பாடுகளால், உயரமான சிலைகளை யாரும் வாங்காததால், 25க்கும் அதிகமான சிலைகள் தேக்கம் அடைந்தன. ஆண்டு தோறும், 500க்கும்