பதிவு செய்த நாள்
26
ஜூன்
2012 
10:06
 
 ஈரோடு: இடித்த கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் முறையிட்டனர்.அந்தியூர், கீழ்வாணி, மூங்கில்பட்டி கிராமத்தில் கரியகாளியம்மன், மகாகாளியம்மன் கோவில், விநாயகர், கருப்பராயன் கோவில் ஆகியவை ஒரே வளாகத்தில் உள்ளன. ஒன்றரை ஆண்டுக்கு முன் சில சமூக விரோதிகள் இக்கோவிலை இடித்துவிட்டனர். கோவிலுக்கு சொந்தமான, 13 ஏக்கர் நிலத்தையும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அறநிலையத்துறை உதவி ஆணையர், "அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், விரைவில் திருப்பணி நடத்தப்படும். இக்கோவிலை இடிக்க யாருக்கும் உரிமை இல்லை என, ஒரு மனுவுக்கு பதில் கூறியுள்ளார். எனவே, இக்கோவிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் திருப்பணி செய்து, கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என, டி.ஆர்.ஓ.,விடம், மக்கள் வலியுறுத்தினர்.