பதிவு செய்த நாள்
26
ஜூன்
2012 
10:06
 
 தென்காசி: தென்காசி சந்தி விநாயகர் கோயிலில் இன்று (26ம் தேதி) வருஷாபிஷேக விழா நடக்கிறது. தென்காசி கூளக்கடை பஜார் சந்தி விநாயகர் கோயிலில் 42வது ஆண்டு வருஷாபிஷேக விழா இன்று (26ம் தேதி) நடப்பதை முன்னிட்டு நேற்று மதியம் எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. விநாயகர் மாக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு தீபாராதனை நடந்தது. இன்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மேல் கும்ப அபிஷேகம், அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு முழுக்காப்பு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார் செய்துள்ளனர்.