வடமதுரை : வடமதுரையில் சவுந்தரராஜ பெருமாளுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் மரங்கள் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வடமதுரையில் தும்மலக்குண்டு ரோடு ஆதம்ஸ் நகர் அருகில் பால்கேணி மேடு என்ற பகுதியில் 10.75 ஏக்கர் நிலம் கோயிலுக்கு சொந்தமாக உள்ளது. இங்கு தற்போது நில அளவையர்கள் மூலம் நிலத்தை அளவீடு செய்யும் பணி நடந்தது.செயல் அலுவலர் மாலதி கூறுகையில், நீர் பாசன வசதி கொண்ட கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு விவசாயம் நடக்கிறது. விவசாயம் செய்ய வாய்ப்பில்லாத பால்கேணி மேடு போன்ற இடங்களில் இருக்கும் தரிசு நிலங்கள் ஆண்டுக்கணக்கில் வெறுமனே உள்ளது. ஆக்கிரமிப்பு பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க நிலத்திற்கு வேலி அமைக்கவும், சுற்றுச்சூழலுக்கு உதவும் நோக்கில் மரங்கள் வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகம் அருகிலிருக்கும் கோயில் இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவி ஆணையர் அனிதா நோட்டீஸ் வழங்கியுள்ளார். விரைவில் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.