பதிவு செய்த நாள்
23
செப்
2021
04:09
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், 53 நாட்களில் பக்தர்கள், 1.44 கோடி ரூபாய் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவை காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர்.அந்த வகையில், 53 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை, கோவில் தக்கார் லட்சுமணன், இணை ஆணையர் பொறுப்பு ரமணி ஆகியோர் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் இரண்டு நாட்களாக உண்டியல் திறந்து எண்ணினர். இதில், ஒரு கோடியே, 43 லட்சத்து, 88 ஆயிரத்தி, 320 ரூபாய் ரொக்கம், 1,422 கிராம் தங்கம், 12 கிலோ, 765 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.