ராமேஸ்வரம் கடலோரத்தில் சர்ச் : ஹிந்து மக்கள் கட்சி எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2021 06:09
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலோரத்தில் அனுமதி இன்றி அமைத்த சர்ச்சை அகற்ற வேண்டும். இல்லையெனில் விநாயகர் கோயில் அமைக்க அனுமதிக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
15 ஆண்டுக்கு முன் ராமேஸ்வரம் ஒலைகுடா சங்குமால் கடற்கரையில் ரூ. 20 லட்சத்தில் மாவட்ட நிர்வாகம் பூங்கா அமைத்தது. இப்பூங்காவுக்கு அனைத்து மதத்தினரும் வந்து பொழுது போக்கிய நிலையில். காலபோக்கில் நகராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரிக்காமல் விட்டதால் விளையாட்டு தளவாட பொருட்கள் காணாமல் போனது. இந்நிலையில் அனுமதி இன்றி பூங்காவுக்குள் சர்ச் அமைத்து சமீபத்தில் விழா கொண்டாடினர். இதற்கு ஹிந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் தாசில்தார், நகராட்சி ஆணையரிடம் புகார் செய்தனர். இதுகுறித்து ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியதாவது: இங்கு அனைத்து மதத்தின் குழந்தைகள், மாணவர்கள், பலரும் பொழுது போக்கினர. ஆனால் இங்கு அனுமதி இன்றி அமைத்த சர்ச்சால் மக்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சர்ச்சை அகற்ற வேண்டும், இல்லையெனில் விநாயகர் கோயில் அமைக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.