விழுப்புரம்: விழுப்புரத்தில் விநாயகர் கோவில் கோபுரம் இடி விழுந்து சேதமடைந்தது. விழுப்புரம் கோலியனுார் கூட்ரோடு பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இப்பகுதியில் நேற்று அதிகாலை மின்னல் இடியுடன் கன மழை பெய்தது. 5:00 மணியளவில், பயங்கர சத்தத்துடன் கோவில் கோபுரத்தில் இடி விழுந்தது. இதில், கோபுரத்தின் மேற்புறம் இடிந்து சேதமானது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.