துாத்துக்குடி: எட்டயபுரம் ஆதிபராசக்தி மன்றம் சார்பில் விவசாயம் செழிக்க கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. எட்டயாபுரம் ஆதிபராசக்தி மன்றம் சார்பில், கொரோனா நோய் நீங்கவும், இயற்கை சீற்றம் தணியவும், மக்கள் நலமுடன் வாழவும், விவசாயம் செழிக்கவும் கலச விளக்குவேள்வி பூஜை நடந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக இயக்க தலைவர் முருகன் வேள்வி பூஜையை தீபம் ஏற்றி துவக்கி வைத்தார். வேள்வி பூஜையில் சிறப்பு மங்கல்பம் செய்து 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி ஏராளமான பெண்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். மழைவளம் வேண்டி கஞ்சி கலய ஆன்மிக ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை மன்ற தலைவர் சிவகாமி துவக்கி வைத்தார். ஆன்மிக இயக்க பொருளாளர் கண்ணன், இணைச்செயலாளர்கள் வேலு, முத்தையா, இளைஞர் அணி பொறுப்பாளர் சக்திவேல், புதூர் மன்ற பொறுப்பாளர் தேவி, உஷா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.