கரூர்: கரூர், தொழிற்பேட்டை கல்யாண சுப்ரமண்யர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுவாமிக்கு காலை பால், தயிர், சந்தனம் மஞ்சள், பன்னீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 16 வகை அபிஷேகம் நடந்தது. பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், உபயதாரர் ஆவண அமைப்பகம் கார்த்திகேயன், மேலை பழநியப்பன், பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.