பகவதியம்மன் கோவிலில் மழை வேண்டி பொங்கல் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2021 02:09
வெள்ளகோவில்: வெள்ளகோவிலை அடுத்த வேலப்பநாய்க்கன்வலசில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோவிலில் நேற்று சுத்துப் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. பிரதி வருடம் வைகாசி மாதம் பூச்சாட்டப்பட்டு தீர்த்தம் செலுத்தி பொங்கல் விழா நடைபெற்று வந்தது. கொரோனாவால் கடந்த இரண்டாண்டாக பூச்சாட்டு நடைபெறவில்லை.
நேற்று காலை பெரிய வீட்டுக்காரர் முதல் பொங்கல் வைத்தும், தொடர்ந்து பொதுமக்கள் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு பொங்கலிலிருந்து சிறிது பொங்கல் சாதம் எடுத்து அன்னாபிஷேகம் செய்ய வைத்துக் கொண்டனர். இரவு 7 மணியளவில் பகவதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அன்ன அலங்காரத்தில் மஹா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுத்துப்பொங்கல் கடந்த 15 ஆண்டுகளுங்கு மேலாக பிரதி வருடம் புரட்டாசி மாதம் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். உடனை அடுத்தநாள் மழைப்பொழிவு உண்டு என்ற நம்பிக்கையில் சுத்துப் பொங்கல் மக்கள் வைத்து வழிபடுகின்றனர்.