பதிவு செய்த நாள்
02
அக்
2021
05:10
நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி அடுத்த V.மேட்டுப்பட்டி , ஸ்ரீ கதிர் நரசிங்கப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாளுக்கு மல்லிகை, தாமரை, பன்னீர், முல்லை, ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, செண்டு மல்லி, ரோஸ் உள்ளிட்ட பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு அர்ச்சனைகள், ஆராதனைகள், தீபாரதனை நடைபெற்றது. பால், தயிர், வெண்ணெய், அவல், சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன்,ராஜசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர்.