12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2021 04:10
ஆண்டுதோறும் பொங்கல் வருகிறது. வீட்டைச் சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கொண்டாடுகிறோம். அதுபோல, கடவுள் குடியிருக்கும் கோயிலை 12 ஆண்டுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்கிறார் காஞ்சிப்பெரியவர். சுவாமி பீடத்தில் சாத்தப்படும் அஷ்டபந்தனமருந்து 12 ஆண்டுகளில் வலிமை இழந்து கரையத் தொடங்கிவிடும். எனவே, புதிதாக மருந்து சாத்தி, திருப்பணிகளையும் செய்து விட்டால் தெய்வ சாந்நித்யம் குறையாமல் விளங்கும்.