பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
புதுச்சேரி : புதுச்சேரியில், தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சத சண்டி மகா யாகம் நாளை துவங்குகிறது. புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், நவராத்திரி காலமான நாளை 7ம் தேதி முதல், 15ம் தேதி வரை, சத சண்டி மகா யாகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாகம், இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.தினமும் காலை 7:00 மணிக்கு யாகம் துவங்குகிறது. கோ பூஜை, குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, வேதிகார்ச்சனை, சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை மற்றும் தம்பதி பூஜை நடக்கிறது.தினமும் 13 முறை பூர்ணாஹூதி நடக்கிறது. அதில் 12 பூர்ணாஹூதியில் ஒன்பது கஜம் நுால் புடவைகளும், 13வது மகா பூர்ணாஹூதியில் பட்டுப்புடவை சமர்ப்பிக்கப்படுகிறது.
விசேஷ திரவியங்கள் மற்றும் பழங்களும் யாகத்தில் சமர்ப்பிக்கப்படும்.மதியம் 1:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியுடன், யாகம் முடிகிறது. மாலை 5:00 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடக்கிறது.தொடர்ந்து வேதபாராயணம், மூலமந்திர ஹோமம், ஷோடசோபசார பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.தர்ம சம்ரக் ஷண சமிதி தலைவர் சீனிவாசன், செயலாளர் சீத்தாராமன் கூறியதாவது: இரண்டாவது ஆண்டாக சத சண்டி மகா யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாகத்தில் பங்கேற்பவர்களின் தீமைகள் விலகி, நன்மை பெறுவர். அனைவரும் யாகத்தில் பங்கேற்று, சண்டிகா பரமேஸ்வரி அம்மன் அருள் பெற வேண்டும். யாகத்திற்கு தேவையான பொருள் உதவி, யாக திரவியங்கள், அன்னதானத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.