பதிவு செய்த நாள்
06
அக்
2021
04:10
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு, தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அவிநாசியில், கொங்கேழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், நாயன்மார்களால் பாடல் பெற்றதுமான பிரசித்தி பெற்ற, அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. மகாளய அமாவாசை தினமான நேற்று, பக்தர்கள் பெருமளலில் சிவாலயங்களில் கூடி, தங்களது முன்னோர்களுக்கான வழிபாடு நடத்தினர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி, சுவாமி தரிசனத்துக்கு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவில் வளாகத்தில் திதி கொடுக்க, தர்ப்பணம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் சமூக இடைவெளியுடன், வழிபட்டு, மகாளய அமாவாசை வேண்டுதல்களை நிறைவேற்றினர்.