நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சப்த மாதாக்கள் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட சுவாமி சிலைகளை வைத்து கொலு அமைத்துள்ளனர். நேற்று முன்தினம் முதல் வரும் 14ம் தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நேற்று மகேஸ்வரி அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.