ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் கோயிலிலில் ஆனி தேரோட்டம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட வடபத்ர சாயி கோயில் பெரியாழ்வார் சன்னதி ஆனி திருவிழா, கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேர் நான்கு ரதவீதி கு வழியாக நிலை வந்தடைந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் குருநாதன், ஸ்தானிகம் ரமேஷ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.