திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர் கோவிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா நடந்தது.
திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளையில் உள்ள இரட்டை விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்று வந்த மண்டல பூஜை விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், மூலவருக்கு சங்காபிஷேகம், கலசாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில் ஷோடசோபவுபச்சார தீபாராதனையும், இரவு 8:00 மணிக்கு உற்சவர் பூப்பல்லக்கில் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.