வெள்ளகோவில்: வெள்ளகோவில் ஐயப்பன் திருக்கோவிலில் நேற்று மூன்றாவது நாளாக கொலு வைத்து பூஜை செய்து சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து ஐயப்ப சாமி கோவில் வளாகத்தில் உள்ள மஞ்சள் மாதா பகவதி அம்மனுக்கு வாராகி அலங்காரம் செய்து அருள் பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஏற்பாடுகளை ஐயப்பா பூஜா சங்கம் மற்றும் சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.