தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி 6ம் நாள் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2021 11:10
தஞ்சாவூர்: தஞ்சாவூர், நகர மையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி ஆறாம் தினம் நிகழ்ச்சியில் குருதேவரின் ஆரதிக்கு முன்பு தஞ்சாவூர் மானம்பூ சாவடி பக்தர்களின் பஜனையும் லலிதா சகஸ்ரநாம பாராயணமும் நிகழ்ந்தது. பிறகு புற்று மாரியம்மன் வழிபாட்டு மன்றம் குழுவினரின் கிராமப்புற கலையான கோலாட்டம் அமோகமாக நடந்தது. கிராம மையத்தில் துர்க்கையாக லட்சுமியாக சரஸ்வதியாக அன்னை ஸ்ரீ சாரதாதேவி என்ற தலைப்பில் பேராசிரியை தி. இந்திரா அம்மையார் சிறப்புரை நிகழ்த்தினார். அதன் பிறகு யோகா மாஸ்டர் திரு. பரமானந்தன் அவர்களது சீடர்களின் யோகா நிகழ்ச்சி சிறப்பாக அரங்கேறியது.