தொட்டியம்: தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா நடந்தது.தொட்டியத்தில் உள்ள புகழ் பெற்ற மதுரைகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருமஞ்சன விழா நடப்பது வழக்கம். அதேபோல், இந்தாண்டு நடந்த ஆனித்திருமஞ்சன விழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி ஆற்றில் இருந்து பால்குடம், தீர்த்தக்குடம், சந்தனக்குடம், அக்னி சட்டி எடுத்து அலகு குத்தி மதுரைகாளியம்மனுக்கு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவை முன்னிட்டு தொட்டியம், பாலசமுத்திரம், கார்த்திகைப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.