புளியங்குடி: புளியங்குடி உலக மீட்பர் ஆலயத்தில் திருவிழா நடந்தது. புளியங்குடி உலக மீட்பர் ஆலயத்தில் 10 நாட்கள் திருவிழா நடந்தது. முதல் நாளன்று பாவூர்சத்திரம் பங்குதந்தை சார்லஸ் அடிகளார் கொடியேற்றி திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடந்தது. ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலியும், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 8ம் திருநாளன்று நற்கருணை பவனி நடந்தது. பாளை.,மறைமாவட்ட முதன்மை குரு ஜோமிஸ் அடிகள் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து நற்கருணை பவனியை தலைமை வகித்து வழிநடத்தி சென்றார். நற்கருணை பவனி மெயின்ரோடு வழியாக சென்று ஆலயத்தில் முடிந்தது. 9ம் திருநாளன்று சப்பர பவனி நடந்தது. முன்னதாக பாட்டத்தூர் உதயம் அறக்கட்டளை ஞானபிரகாசம் அடிகளார் மற்றும் தமிழக இறைஅலசல் பணியக செயலர் சகாயஜான் அடிகளார் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து 10ம் திருநாளன்று பாளை., மறைமாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் அடிகளார் திருவிழா திருப்பலி நிறைவேற்றினார். திருவிழா ஏற்பாடுகளை புளியங்குடி உலக மீட்பர் ஆலய பங்குதந்தை அருள்ராஜ் அடிகளார், திருத்தொண்டர் ராபின், பங்கு பேரவை செயலர் ஜோசப்அமல்ராஜ், பொருளாளர் அருள்ஜோசப்ராஜ், நிர்வாகிகள் ராசையா, சுந்தரவியாகப்பன் மற்றும் அந்திய பொறுப்பாளர்கள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.