பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
10:06
திசையன்விளை : சிவசுப்பிரமணியபுரம் சுடலைமாடசுவாமி கோயிலில் ஜூலை 5ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.சிவசுப்பிரமணியபுரம் சுடலை மாடசுவாமி கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 4ம் தேதி துவங்கி இரு நாட்கள் நடக்கிறது. விழாவில் முதலாம் நாளில் மங்கள இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், மஹாகணபதி, நவக்கிரஹ, மஹாலெட்சுமி ஹோமங்கள், பிரம்மச்சாரி, கோ பூஜைகள், பூர்ணாஹூதி, புனிதநீர் எடுத்தல், வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ணம், முதல்கால யாக பூஜை ஹோமம், திரவ்யாஹூதி, வஸ்திரஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, யந்திரஸ்தாபனம் ஆகியன நடக்கிறது. இரண்டாம் நாளில் மங்கள இசை, ஸ்ரீபூதசுத்தி, சுவாமி ரக்ஷாபந்தணம், இரண்டாம் கால யாக பூஜை, ஸர்வர்சாஹூதி, திரவ்யாஹூதி, வஸ்திராஹூதி, மஹா பூரணாஹூதி, தீபாராதனை, கடம் எழுந்தருளல், சுடலைமாடசுவாமிக்கு மாஹா கும்பாபிஷேகம், மஹா அலங்கார பூஜை, மகேஸ்வர பூஜை, அன்னதானம், சிறப்பு அலங்கார பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.பூஜை நிகழ்ச்சிகளை சண்முகபட்டர், ராஜபட்டர் குழுவினர் செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.