பதிவு செய்த நாள்
29
ஜூன்
2012
10:06
குற்றாலம் : குற்றாலம் காசிலிங்க சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. குற்றாலம் கோமதி விசாலாட்சி சமேத சங்கரமூர்த்தி காசிலிங்கசுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது. காலையில் கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. விமானத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாள், அனுக்ஞை விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கையம்மன், சண்டிகேஸ்வரர், லிங்கோத்வர், புற்றீஸ்வரர், பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சங்கர்ராமன், மகேஷ் பட்டர் சிறப்பு பூஜை வழிபாட்டினை நடத்தினர். நிகழ்ச்சியில் குற்றாலம் டவுன் பஞ்.,தலைவர் லதா, நிர்வாக அதிகாரி ராசையா, குற்றாலநாதர் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கம் பலவேசம், டாக்டர் வீரமணி, திருப்பணிக்குழு தலைவர் சீனிக்கடை குருசாமி, செயலாளர் போத்தர் ராஜேந்திரன், செல்வராஜ், சங்கரலிங்கம், பேராசிரியை கலைவாணி, சாலியர் சமுதாய குல தெய்வ வகையறாக்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.