சதுரகிரியில் மழை: நவ.,5ம் தேதி வரை பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2021 06:11
வத்ராயிருப்பு: சதுரகிரி மலைப்பகுதியில் மழை பொழிவும், ஓடைகளில் நீர்வரத்தும் இருப்பதால் நாளை ஐப்பசி பிரதோஷ வழிபாட்டிற்கும், நவம்பர் 4 அன்று அமாவாசை வழிபாட்டிற்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் மற்றும் வனத் துறை அறிவித்துள்ளது.
ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசையை முன்னிட்டு நான்கு நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த சில நாட்களாக சதுரகிரி வனப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து உள்ளது. சிறிது நேரம் பலத்த மழை பெய்தால் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும் சூழல் உள்ளது. இதனால் இம்மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டிற்காக நவம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் மற்றும் வனத் துறை அறிவித்துள்ளது.