திருக்காமீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணி: எதிர்க்கட்சித் தலைவர் ஆய்வு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2021 07:11
வில்லியனுார்: வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலில் புனரமைப்பு பணியை எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆய்வு செய்தார்.வில்லியனுாரில் உள்ள கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் கோவிலில், மத்திய அரசின் சுதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் விடுபட்ட புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டு, புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை சார்பில் பணி நடந்து வருகிறது.இத்திட்டத்தில், கோவில் வெளிச்சுற்றுப் பிரகாரத்தில் கருங்கற்களால் பாதை அமைத்தல், கோவில் குளத்தை புனரமைத்தல், குளத்தைச் சுற்றி கைப்பிடி அமைத்தல், மணிமண்டபம் மற்றும் கலையரங்கம் கட்டுதல், கோவில் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள தகவல் மையம் அமைத்தல், கோவில் வளாகம் முழுவதும் அலங்கார விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது.கோவில் வெளிப்பிரகார பகுதியில் கருங்கல் தரை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதை, எதிர் கட்சி தலைவர் சிவா நேற்று பார்வையிட்டார். பணிகளை தரமாகவும் துரிதமாகவும் செய்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். கோவில் சிறப்பு அதிகாரி திருவரசன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.