பதிவு செய்த நாள்
03
நவ
2021
04:11
மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார 10 நாட்கள் உற்சவம் துவங்கியது.வைணவத்தின் பனிரெண்டு ஆழ்வார்களில், பூதத்தாழ்வார் குறிப்பிடத்தக்கவர். இவர், மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் அருகாமை பகுதி நந்தவன பூந்தோட்ட குருக்கத்தி மலரில், ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில் அவதரித்ததாக, வைணவர் நம்பிக்கை. கோவிலில், இவர் சன்னதி அமைந்து, பக்தர்கள் வழிபடுகின்றனர்.இவரது அவதார உற்சவம், கோவிலில் இன்று துவங்கி - நவம்பர் 12 வரை நடக்கிறது. தினமும் பிற்பகல் துவங்கி, மாலை வரை, திருமஞ்சனம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருவாய்மொழி சாற்றுமறை சேவை நடக்கிறது. அவதார ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளான, நவம்பர் 12ல், மூலவர் உற்சவம் நடைபெறும்.கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு கருதி, அலங்கார சிறப்பு சேவை, வீதியுலா, திருத்தேர் ஆகிய உற்சவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.