பதிவு செய்த நாள்
05
நவ
2021
03:11
காங்கேயம்: சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது, இதில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து காப்பு அணிந்து கொண்டனர்.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. ஒரு வார காலம் நடைபெறும், இதில் மதியம் 12:00 மணிக்கு சுப்ரமணியர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 1:00 மணிக்கு சுப்ரமணியசுவாமி வள்ளி தெய்வானையுடன் அலங்காரத்தில் உள்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்சியில் முக்கிய நிகழ்வான காப்பு கட்டுதல் சிறப்பாகும். நேற்று 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். தினமும் காலை மணி 10:30 மற்றும் மாலை 4:00 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், சுவாமி திருவீதி உலா காட்சியும் மலைமீது கோவில் வளாகத்தில் நடைபெரும். நேற்று பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. இதனால் கோவில் உள்பகுதி, ராஜகோபுரம் முன்பகுதி, வாகனம் நிருத்தும் இடம் வரை பக்தர்கள் வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
இரவு வரை பக்கதர்கள் அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றனர். ஒவ்வொரு வருடமும், சுவாமி மலையில் இருந்து இறங்கி, மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரர் சாமி கோவிலுக்கு சென்று, தினமும் காலை அபிஷேக ஆராதனையும், திருவீதி உலா காட்சியும் நடைபெரும். கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா தொடர்பான, அனைத்து உற்சவ நிகழ்வுகளும் (சூரசம்உறாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் உட்பட) திருக்கோவிலுக்குள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சிவன்மலைக்கு பக்தர்கள் அதிக அளவில் கார், பைக் வாகனத்தில் வந்திருந்தனர். இதனால் மலைப்பாதையில் இரு புறத்திலும் வாகனங்கள் வரிசைகட்டி நின்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு பணிக்கு போலீசார் ஈடுபடுத்தப்படாமல் இருந்ததால் மலைபாதையில் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதனால் சிலர் மலைப்பாதையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்ய நடந்து சென்றனர்.