ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2021 11:11
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கடந்த 4 நாட்களின் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களின் பக்தர்களின் வருகை மொத்தம் 1,04,184 பேர் வருகை புரிந்துள்ளனர். ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் ஊஞ்சல் மிகவும் சிறப்பு வாய்ந்த உற்சவம் 6ம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்வு டோலோத்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு தாயார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் வந்தடைந்தார்.
மூலவர் சேவை : இந்த உற்சவம் வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை, காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.30 வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சேவை உண்டு. மாலை 3.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
2021-ம் ஆண்டின் உச்சபட்ச பக்தர்களின் வருகை
03/11/21-ம் தேதி - 7,187 பக்தர்களும், 04/11/21-ம் தேதி - 19,530 பக்தர்களும், 05/11/21-ம் தேதி - 31,759 பக்தர்களும் 06/11/21 -ம் தேதி - 45,708 பக்தர்களும் வருகை தந்துள்ளனர்.