இன்று கந்த சஷ்டி .. உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா ...!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2021 08:11
திருச்செந்தூர் கோயிலை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
* பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று இரண்டு மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் உள்ளனர்.
* காவல் தெய்வமாக வீரபாகு உள்ளதால் இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் பெயர் உண்டு. தினம் வீரபாகுவுக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
* மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. கட்டம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூஜித்த பஞ்ச லிங்கங்களை தரிசிக்கலாம். இந்த அறைக்கு பாம்பறை என்று பெயர்.
* கோயிலின் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
* கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்கு கொண்ட இந்த கோபரம் 157 அடி உயர் கொண்டது.
* அருணகிரி நாதர் 83 திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளனார்.இதை தினமும் பாடினால் கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
* கோயில் அமைப்பு பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் உள்ளது.
* சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலம் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
* மூலவர் முன் உள்ள இடத்தை மணியடி என்பவர், இங்கு நின்று சுவாமியை தரிசிப்பது சிறப்பு.
* நாழிக்கிணறு 24 அடி ஆழம் கொண்டது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும்.
* மவுனசாமி காசிநாத சுவாமி ஆறுமுகசாமி மூவரும் கோயில் திருப்பணிக்காக தங்கள் வாழ் நாளை இவர்களின் சமாதி நாழிக்கிணறு அருகே உள்ளது.
* இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில் இருந்ததாக வரலாறு கூறுகிறது.
* மன்னார் வளைகுடாவின் கைரேயோரத்தில் அலைகள் தழுவ அமைந்திருப்பதால் , அலைவாய் என்று அழைக்கப்பட்டது. திரு என்றும் அடைமொழியுடன் திருச்சீரலைவாய் எனப்படுகிறது.
* கோயிலுக்கு செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோயில் உள்ளது. இங்கு வணங்கிய பின்னரே முருகனை வணங்க செல்ல வேண்டும்.
* முருகனின் வேல் மாமரமாக மாறி நின்ற சூரபத்மனை பிளவுபடுத்திய இடம் இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாப்பாடு என்னும் இடம் ஆகும். தற்போது மணப்பாடு எனப்படுகிறது.
* முருகனின் அவதார நோக்மே அசுரர்களை அழிப்பதுதான். அந்த அவதார நோக்கம் நிறைவேறியது இங்கு தான்.
* ராஜகோபுரம் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெயவானை திருமண நாளில் மட்டும் திறக்கப்படும்.
* பிரகாரங்களில் தூண்களில் கந்த சஷ்டி கவசப்பாடலும், உள் பிரகாரங்களில் தல வரலாற்றை விளக்கும் வரைபடங்களும் உள்ளன.
* முருகனின் வரலாறறை படிப்போரும் கேட்போரும் வளமான வாழ்வு பெறுவர் என்று சூதக முனிவர் கூறியுள்ளார்.