பதிவு செய்த நாள்
09
நவ
2021
08:11
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கடந்த 4ம் தி கந்தசஷ்டி திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. 5ம் திரு நாளான நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுவாமி ஜெயந்திநாதர், வள்ளினை அம்பாளுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைஅம்பாளுடன் தங்கச்சப்பரத்தில் யாகசாலைக்கு எழுந்தருளினார். 6 ம் திரு நாளான இன்று (9ம் தி) அதிகாலை 1 : 0 0 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 9:00 மணிக்கு உச்சிக்கால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
மதியம் 1:00 மணிக்கு மாலை சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர்சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருள்கிறார். பின்னர் கோயில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. அதனால், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை முகப்பில் மூன்று பக்கமும் சுற்றி தகரகத்தினால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரை வழியா க பக்தர்கள் வரமுடியாதபடி நாழிக்கிணற்றில் இருந்து கடல்நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.போலீசார் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. துாத்துக்குடி எஸ்.பி., யக்குமார் தலைமையில், 2 ஆயிரம் லீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருக்கல்யாணம்: 7 -ம் திருநாளான நாளை (10ம் தேதி) அதிகாலை 3 :00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு சுவாமிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 4:00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. திருக்கல்யாணம் நடைபெறும் தினமான நாளையும் பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்யவோ, நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கோ அனுமதி இல்லை. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.