கதிர்காமம் முருகனுக்கு தங்கவேல் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2021 04:11
புதுச்சேரி: புதுச்சேரி கதிர்காமம் முருகன் கோவிலுக்கு, முதல்வர் ரங்கசாமி தங்க வேல் வழங்கினார்.புதுச்சேரி, கதிர்காமம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. சஷ்டியை முன்னிட்டு, நேற்று கோவிலில் சிறப்பு யாகம் நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று கதிர்காமம் முருகனுக்கு தங்க வேல், சேவற்கொடி வழங்கி, வேண்டுதலை நிறைவேற்றினார். அரைகிலோ எடை யுள்ள இரண்டும் தலா இரண்டு அடி நீளம் உடையவை. இதன் மதிப்பு ரூ.௨௫ லட்சம் என கூறப்படுகிறது. முதல்வர் வழங்கிய தங்க வேல் யாகத்தில் வைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. பின் யாகத்து கலச நீரால் முருகனுக்கு அபிஷேகம் நடந்தது. முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தங்க வேல் மற்றும் சேவற்கொடி சாற்றப்பட்டது.நிகழ்ச்சியில் ரமேஷ் எம்.எல்.ஏ., கோவில் செயலர் பழனி ஆகியோர் பங்கேற்றனர்.