குருப்பெயர்ச்சி 2021 : பரிகாரம் செய்ய வேண்டியது யார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2021 11:11
பிலவ வருடம் ஐப்பசி 27 (13.11.2021) சனிக்கிழமை மாலை 6.21 மணிக்கு குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஒரு ராசியில் ஒரு வருட காலம் சஞ்சரிக்க வேண்டிய குருபகவான் இந்த முறை ராசி மண்டலத்தை சுற்றி வரும் காலக்கணக்கினை சரி செய்யும் விதமாக ஐந்து மாதம் ஒரு நாள் மட்டுமே கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். வருகின்ற சுபகிருது வருடம் சித்திரை 1ல் (14.4.2022) வியாழன் அன்று காலை 7.59 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். ஆக இந்த குருப்பெயர்ச்சி பலன் அடுத்த ஐந்து மாதங்களுக்கு மட்டுமே. ஆங்கிரச முனிவருக்கும், ஸ்ரத்தா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் ‘பிரகஸ்பதி’ . தவத்தில் ஈடுபட்டு சிவனருளால் நவகிரகங்களில் ஒருவராகவும், தேவர்களுக்கு குருநாதராகவும் விளங்கும் பேறு பெற்றார்.
கிரகங்களில் ஆண்கிரகமான இவருக்குரிய நட்சத்திரங்கள் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி. குருதிசைக்குரிய காலம் 16 ஆண்டுகள். தான் இருக்கும் ராசியில் இருந்து 5,7,9 பார்வைகளால் நன்மையை வழங்குவார்.
குருப்பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்: மிதுனம் - சிம்மம் - துலாம் பரிகாரம் செய்வதன் மூலம் பயன்பெறும் ராசிகள்: கடகம் - கன்னி - தனுசு - மீனம்
சம பலன் ராசிகள்: மேஷம் – ரிஷபம் – விருச்சிகம் – மகரம் - கும்பம்