பட்டமங்கலத்தில் குருபெயர்ச்சி விழா: சிறப்பு தீபாராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2021 10:11
திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
குருத்தலங்களுல் கிழக்கு முகமாக தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ள ஒரே தலம் பட்டமங்கலம். இங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனி சன்னதியாக அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இன்று மாலை 6:21 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்கிறார்.குருப்பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை 5:30 மணி முதல் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் துவங்குகிறது. மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பார். தொடர்ந்து ஆலமரத்தடியில் எழுந்தருளியுள்ள உற்ஸவருக்கு அர்ச்சனைகள் நடைபெறும். மதியம் நடை சாத்தப்படாமல் தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். மாலை .6:21 மணிக்கு குருப்பெயர்ச்சி முடிந்தவுடன் ராஜகோபுரம், வடக்கு கோபுரம், மூலவர் விமானத்திற்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.