புளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் குருபெயர்ச்சி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2021 12:11
புளியரை: புளியரையில் சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி மற்றும் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளது. இக்கோயிலில் வியாழன் தோறும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்து வருகிறது. குரு பகவான் இன்று (13ம் தேதி) மகர ராசியில் இருந்து, கும்பராசிக்கு இடம்பெயர்கிறார். இதனைமுன்னிட்டு, கோயிலில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. தொடர்ந்து லட்ச்சார்ச்சனை நடந்தது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை மகாகணபதிக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு ருத்ர ஏகாதசி, கும்ப பூஜை நடைபெற்றது. மதியம் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.