திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் ஐப்பசித்திருவிழா ஆராட்டுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2021 12:11
திருவட்டார்: திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஐப்பசித்திருவிழா நிறைவு நாளில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. 108 வைணவத்திருத்தலங்களில் ஒன்றானதும், தென்னாட்டின் வைகுண்டம் எனப்போற்றப்படுவதுமான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா 10 நாட்கள் நடந்தது. விழாவை ஒட்டி தினமும் அதிகாலை நடை திறக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி பள்ளிவேட்டைக்கு எழுந்தருளியது. விழா நிறைவு நாள் இரவு சுவாமி அருவிக்கரையை நோக்கி பரளியாற்றில் ஆறாட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி, ஆராட்டு நடந்தது. நிகழ்ச்சியில் , பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.