நத்தம்: நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் குருப் பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. நவக்கிரகங்கள் அமைந்துள்ள சிவ ஸ்தலங்களில் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தனி சிறப்பு பெற்றுள்ளது. இங்கு, நவக்கிரகங்கள் அமர்ந்த நிலையில் இருப்பர். திருக்கணித பஞ்சாங்கப்படி நவகிரகங்களில் முதன்மையான குரு, மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியடைந்தார். இதற்காக சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை தீபாராதனைகள் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.