குருவித்துறையில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை, ஹோமம்: பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2021 07:11
சோழவந்தான்: குருபெயர்ச்சியை முன்னிட்டு குருவித்துறை குருபகவான் சன்னதியில் லட்சார்ச்சனை ஹோமம் நடை பெற்றது. இங்குள்ள சித்திர ரதவல்லப பெருமாள் கோயில் முன் தனி சன்னதியில் சுயம்புவாக குருபகவான் உள்ளார். இன்று (நவ.,13) மாலை 6:10 மணிக்கு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குருபகவான் இடம் பெயர்ச்சியானார். இதை முன்னிட்டு காலை 10:45 மணிக்கு பட்டர்கள் ரங்கநாதர், ஸ்ரீதர், ராஜா, பாலாஜி குழுவினரால் குருபகவானுக்கு மலர்களால் லட்சார்ச்சனை நடந்தது. மதியம் 1:00 மணி வரை லட்சார்ச்சனை நடைபெற்றது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.