பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நேற்று மாலை 6:21 மணிக்கு நவகிரகங்களில் குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நகர்ந்தர்.. இதனை முன்னிட்டு குருபெயர்ச்சி விழா திருவாவினன்குடியில் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை செய்யப்பட்டது. கோரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை யின் படி குரு பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.