பழநி: பழநியில் திருக்கார்த்திகை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பழநி மலைகோயிலில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கிரிவீதி, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். வரிசையில் வின்ச், ரோப்கார் ஸ்டேசனில் காத்திருந்து மலைக்கோயில் சென்றனர். கிரி வீதியில் வாகனங்களை பக்தர்கள் நிறுத்திச் சென்றனர்.