Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
மிதுனம் : கார்த்திகை ராசி பலன் மிதுனம் : கார்த்திகை ராசி பலன் சிம்மம் : கார்த்திகை ராசி பலன் சிம்மம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » தை ராசி பலன் ( 14.1.2022 முதல் 12.2.2022 வரை)
கடகம் : கார்த்திகை ராசி பலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:28

புனர்பூசம் - 4: எந்த பிரச்னைகள் வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிக்க கூடிய ஆற்றல் பெற்ற புனர்பூச நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் திரிகோணம் பலமாக இருப்பதால் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும். நெருங்கிய நண்பர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட்டு மறையும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு  எதிர்பார்த்த பணவரவில் தாமதம் இருக்கும். அரசியல்துறையினருக்கு நெருக்கடி அகலும். தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாறும்.
சந்திராஷ்டமம்: டிச.9
அதிர்ஷ்ட நாள்: நவ. 22, 23
பரிகாரம்: வெங்கடாஜலபதியை வணங்க வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

பூசம்: எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும் பூச நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் வீடு, மனை, வாகனம் சம்பந்தமான விஷயங்களில் எதிர்பார்த்த நன்மை கிட்டும். எதிர்பார்ப்பு ஒவ்வொன்றாக நிறைவேறும்.  மனம் மகிழும்படியாக சுபநிகிழ்ச்சிகள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரவு படிப்படியாக அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான நீண்ட துார பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே எதிர்பாராத மன வருத்தம் ஏற்பட்டு நீங்கும். நிதானமாக செய்யும் செயல்கள் கூடுதல் வெற்றியை தரும். பெண்கள்  எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பர். பிள்ளைகளின் வளர்ச்சி கண்டு பெருமிதம் கொள்வர்.  மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமுடன் படிப்பர். அதே சமயத்தில் நண்பர்களுடன் பயனுள்ள பொழுதுபோக்கில் ஈடுபட்டு மகிழ்வர்.
சந்திராஷ்டமம்: டிச.10
அதிர்ஷ்ட நாள்: நவ.23, 24
பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்ய கஷ்டம் தீரும்.

ஆயில்யம்: எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் பேச்சின் இனிமையால் நினைத்த காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் ஒவ்வொன்றாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த நேரத்தில் நண்பர்களின் மூலம் பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி மறைந்து சகஜ நிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்க  உங்களை நாடி வருவார்கள். வேலைவாய்ப்பு, தொழில் விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் சரியான சமயத்தில் கிடைக்கும். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சிக்காக பாடுபடுவர். மாணவர்களுக்கு பெற்றோரை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டமம்: டிச.11
அதிர்ஷ்ட நாள்: நவ.24, 25
பரிகாரம்: சிவபார்வதியை வழிபட்டு வர நன்மைகள் உண்டாகும்.

 
மேலும் தை ராசி பலன் ( 14.1.2022 முதல் 12.2.2022 வரை) »
temple
அசுவினி: தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நினைத்த காரியத்தை ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4: அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கார்த்திகை நட்சத்திர ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் ம்ருகசீரிஷ நட்சத்திர ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: சொல்லாற்றல் மிக்க புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை ... மேலும்
 
temple
மகம்: சொந்த முயற்சியாலும், மனதுணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மக நட்சத்திர அன்பர்களே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.