Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு : கார்த்திகை ராசி பலன் கும்பம் : கார்த்திகை ராசி பலன் கும்பம் : கார்த்திகை ராசி பலன்
முதல் பக்கம் » புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206)
மகரம் : கார்த்திகை ராசி பலன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகரம் : கார்த்திகை ராசி பலன்

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:11

உத்திராடம் - 2, 3, 4: எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் மிகுந்த உத்திராட நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் கூடும். பிள்ளை களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்களுக்கு முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்னைகள் வராமல் தடுக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்திதரும். அரசியல்துறையினருக்கு சுபச் செலவுகள் இருக்கும். மாணவர்கள் கவனத்துடன் படிப்பது கூடுதல் மதிப்பெண்  பெற உதவும். தேர்வு எழுதும் வரை வீண்பொழுதுபோக்கை தவிர்ப்பது மிகவும் அவசியம்.  
சந்திராஷ்டமம்: நவ.25, 26
அதிர்ஷ்ட நாள்: டிச. 7
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்க எதிலும் வெற்றி உண்டாகும்.

திருவோணம்: விருந்தினரை உபசரிப்பதில் மகிழ்ச்சியடையும் திருவோண நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்னைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு விருப்பம் இல்லாத இடமாற்றம், பணிமாற்றம்  உண்டாகலாம். தொழில்,  வியாபாரத்தில் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு ஆறுதல் அளிக்கும். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல்  திடீர் பயணம் செல்லும் சூழ்நிலை உருவாகலாம்.  சிலர் வீண் மன சங்கடத்திற்கு ஆளாகலாம். சகோதர வழியில் ஓரளவு உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும்  அன்றன்றைக்கே படித்து முடிப்பது மிகவும் அவசியம்.
சந்திராஷ்டமம்: நவ.26, 27
அதிர்ஷ்ட நாள்: டிச.8
பரிகாரம்: சனிபகவானை வழிபட்டால் காரியத் தடை, அகலும்.

அவிட்டம் - 1, 2: மற்றவர்களிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்ளும் திறமையுள்ள அவிட்ட நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக்கேடு போன்றவை ஏற்படலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் வழியில் சுபச்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். மறைமுகப் போட்டிகள் தலைதுாக்கலாம்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வுக்கு ஆளாவர்.  குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்ல முடியாத நிலை உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு இருக்காது. சில நேரங்களில் வாக்குவாதம் கூட உருவாகலாம். பெண்களுக்கு வீண் கவலைகள், எதிர்பாராத அலைச்சல்  அடிக்கடி ஏற்படலாம். தாய்வீட்டினரின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும்.  ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் பாடங்களை உடனுக்குடன் படிப்பது நல்லது. சரியான நேரத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
சந்திராஷ்டமம்: நவ.27, 28
அதிர்ஷ்ட நாள்: டிச.9
பரிகாரம்: விநாயகரை  வணங்கி வர வீண் அலைச்சல் குறையும்.

பகிர்க copied
 
மேலும் புரட்டாசி மாதபலன் (18.9.2026 - 17.10.206) »
temple news
அசுவினி: நேர்மையாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் புரட்டாசி மாதம் நன்மையான மாதமாகும். கேது பூர்வ ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: எப்போதும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வரும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: கனிவான குணமும் பிறருக்கு உதவி செய்யும் மனமும் கொண்ட உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஒவ்வொன்றையும் அனுபவத்தின் வழியாக கற்று முன்னேற்றம் அடைந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar