Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கும்பம் : கார்த்திகை ராசி பலன் கும்பம் : கார்த்திகை ராசி பலன் மேஷம்: மார்கழி ராசி பலன் மேஷம்: மார்கழி ராசி பலன்
முதல் பக்கம் » தை ராசி பலன் ( 14.1.2022 முதல் 12.2.2022 வரை)
மீனம் : கார்த்திகை ராசி பலன்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 நவ
2021
12:38

பூரட்டாதி - 4: திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பதிலும் தயங்காத பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம். கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்னைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பெண்களுக்கு அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பண விவகாரங்களில் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள்  கிடைக்கும். மாணவர்கள்  ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: நவ.29, 30
அதிர்ஷ்ட நாள்: டிச.11
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க மனக்கஷ்டம், நீங்கும்.

உத்திரட்டாதி: எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று காரிய வெற்றி காணும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் உருவாகும். பணவரவு திருப்தியளிக்கும். மறைமுக  எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருந்த மறைமுகப் போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள்  உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. பெண்கள்  இக்கட்டான சூழ்நிலையை மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பர். அண்டை வீட்டாரின் எதிர்ப்புகள் மறையும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை ஏற்படும். கவனச்சிதறலை குறைத்து பாடங்களில் கவனம் செலுத்தி படிப்பது நல்லது. நண்பர்களின் உதவி சரியான சமயத்தில் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: நவ.30; டிச.1
அதிர்ஷ்ட நாள்: டிச.12
பரிகாரம்: ரங்கநாதரை தரிசித்து வர பாவங்கள் நீங்கும்.

ரேவதி: எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் ரேவதி நட்சத்திர அன்பர்களே! இந்த மாதம் நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். பணவரவு மனமகிழ்ச்சியை தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்னை குறையும். மறைமுக எதிர்ப்புகள்  படிப்படியாக நீங்கும். எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு நிகழ்வதால் மனதில் மகிழ்ச்சி நிலவும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.  தொழில்.  வியாபாரம் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள்  பெருமளவில் வசூலாகும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு, வீண் அலைச்சல் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். சாமர்த்தியமான பேச்சால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு  இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். மனம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பர். கையில் கூடுதலாக பணம்  புரளும். மாணவர்களுக்கு வளர்ச்சிக்கான சூழல் அமையும். எதிர்கால வளர்ச்சி குறித்து சிந்திப்பர். ஆசிரியர்கள் உதவி செய்வர்.சந்திராஷ்டமம்: டிச.1, 2
அதிர்ஷ்ட நாள்: டிச.13
பரிகாரம்: நரசிம்மரை தீபம் ஏற்றி தரிசிக்க கடன் பிரச்னை குறையும்.

 
மேலும் தை ராசி பலன் ( 14.1.2022 முதல் 12.2.2022 வரை) »
temple
அசுவினி: தன்னம்பிக்கையுடன் செயலாற்றும் அசுவினி நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் நினைத்த காரியத்தை ... மேலும்
 
temple
கார்த்திகை - 2, 3, 4: அடுத்தவர் யாரும் குறை கூறக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கார்த்திகை நட்சத்திர ... மேலும்
 
temple
மிருகசீரிடம் - 3, 4: அடுத்தவர் செய்யும் நற்காரியங்களுக்கு ஆதரவாக இருக்கும் ம்ருகசீரிஷ நட்சத்திர ... மேலும்
 
temple
புனர்பூசம் - 4: சொல்லாற்றல் மிக்க புனர்பூச நட்சத்திர அன்பர்களே இந்த மாதம் சாமர்த்தியமாக பேசி காரியத்தை ... மேலும்
 
temple
மகம்: சொந்த முயற்சியாலும், மனதுணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறும் மக நட்சத்திர அன்பர்களே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.