நத்தம்: நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி முருகன் கோவிலில். திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவில் முழுவதும் கார்த்திகை விளக்குகள் ஏற்றப்பட்டது. மகாதீபம் ஏற்றும் விழாவில் சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.