சூலூர்: ஹரே கிருஷ்ணா இயக்கம் சார்பில் சூலூரில், தீப உற்சவ விழா நடந்தது. சூலூர் ஹரே கிருஷ்ணா இயக்கம், முத்துக்கவுண்டன்புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், தீப உற்சவ விழா நடந்தது. ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய தாஸ் பேசுகையில்," முழு முதற்கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அன்பை பெற, தீப உற்சவம் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. பக்தர்களின் அன்புக்கு கட்டுப்படும் கிருஷ்ண பகவானுக்கு, நெய் தீபம் காட்டி வழிபடுவதால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்," என்றார். தொடர்ந்து, குழந்தைகள், பக்தர்கள் தீப ஆரத்தி காட்டி கிருஷ்ணரை வழிபட்டனர். கீர்த்தனை, கிருஷ்ண கதா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பிரசாதம் வழங்கப்பட்டது. ஹரிஹரன், சம்பத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.