பதிவு செய்த நாள்
25
நவ
2021
05:11
சென்னை:ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவ பயிற்சி சான்றிதழ் படிப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சட்டசபையில், அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது, ஆறு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள், 1.50 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். இதையடுத்து, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில், வைணவம் பாஞ்சராத்ர ஆகமத்திற்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளன.
விண்ணப்பதாரர்கள் ஹிந்துக்களாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹிந்து வைணவ கோட்பாடுகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.பயிற்சி பெறும் மாணவர்கள், பயிற்சி நிலைய வளாகத்திலேயே தங்கி பயில வேண்டும். பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவருக்கு இலவசமாக உணவு, சீருடை, உறைவிடம், பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்ப படிவங்களை, கோவில் இணையதளமான, www.srirangam.org; ஹிந்து சமய அறநிலையத்துறை இணையதளமான, www.hrce.tn.gov.in ஆகியவற்றில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வைணவ பயிற்சி வகுப்புகளில் ஆர்வமுள்ள மாணவ - மாணவியர் விண்ணப்பித்து பயனடையலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
அன்னதான நன்கொடை : ஸ்ரீரங்கம் திருக் கோயிலில் நடைபெறும் நாள் முழுதும் அன்னதானத்தில் தினசரி சுமார் 2500 பக்தர்களும் விடுமுறை மற்றும் திருவிழா காலங்களில் சுமார் 5000 பக்தர்களும் உணவு அருந்தி செல்கின்றனர். இந்த திட்டத்திற்கு உதவும் வகையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பக்தர் திரு.பிரகாஷ் என்பவர் ரூபாய் ஏழு லட்சத்திற்கான காசோலையை கோயில் இணை ஆணையர் திரு செ. மாரிமுத்து அவர்களிடம் நன் கொடையாக வழங்கினார், நாள் முழுதும் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குபவர்கள் கீழ்கண்ட திருக்கோயில் வங்கி கணக்கில் இணைவழியிலும் செலுத்தலாம்